About Adhinaathar Alwar Temple – Thirukkurugur
Thirukkurugoor is the Avathara Sthalam (birth place) of Nammalwar. This sthalam explains his speciality and his works towards Vaishnavism and because of this, the sthalam is called “Azhwar Tirunagari”.
Emperumaan, Sriman Narayanan says to Brahma that before producing him, he came to Porunai river and lived there. And said him to keep this temple as “Aadhi temple” (first and main temple) he should worship him. Like this he gives teaches (Ubhadesam) to Brahma as a Guru (Teacher) since, Sriman Narayanan acts as a Guru for Brahma, this sthalam is called “Kurugoor”.
Kuru means do this is the meaning. Since, Narayanam asks Brahma to do the tapas and his workship towards him, this sthalam is called “Kurugoor”. The Moolavar, Aadhinarayanan has very big thirumeni (body) and he came on his own (Suyambu) its not done the Pradhishtai (installed). The feet of the Moolavar comes up inside from the Earth.
Devendran – Indiran finally got out from Sabham (Sabhavimotsanam) after worshipping the Aadhinadha perumal. He got the sabaham from his parents because he is not treating them well and obeying them. In this sthalam Lakshmanan (brother of Sri Ramar) did pradhistai (made) himself as “Tamarid tree” and in that tree Emperumaan lives in Bramacharya stage.
Once, periyapiratti comes there and asked Narayanan to marry her. At that time, Narayanan converts her as a flower and wear on his body. In pramadhi year, Vaikasi 12th day in Valarpirai – Pournami, friday, Nammalvar was born to vellalar and Udaya Nangai. When he born, he didnt cry or open his eyes and didnt drink the Mother’s milk. This is because when the Sadavaayu (Air) went inside the body of Udaya Nangai, he made that not to enter and push him out. Because of this, Nammalwar is popularly named as “Sadagopar”.
He doesnt open his eyes because he doent wanted to see anyone except Sriman Narayanan, and the same way he wants to speak only about Emperumaan, so he doesnt open his mouth to cry (or) to drink milk. His parents were worried about him thinking he might be retarded (Jadam). So, they brought him to Aadhinadha perumaltemple and named him as “Maaran”.
At that time, closing his eyes, he goes near to the Tamarid tree and sits there in Yoga stage till the age of 16. At the same time, Madurakavi Alwar starts his Bhakthi Yaatra towards Ayodhya, Vada Madura, Gaya, Kasi, Kanchi, Avanti and Dwaraka. He was born in Tirukkoloor as an ordinary Andhanar (Brahmanar) and was well knowledged in Sanskrits. When he was travelling to Ayodhya, a flashy light arised in the sky which directed him along the south direction. He followed the light and finally it disappeared in the Thirukkurugoor Aadhinadhar temple. On entering the temple Madhurakaviyaar found and surprised at Nammalvar, being 16 years old child in Yana nilai (thyama Stage).
He went close to Nammalvar and made some noises to awakes him from the thyanam. Then Madhukaviyaar questiontioned Nammalvar that how the life (Aathma) live and what it is eating to live? For this, Nammalwar said “Atthai thindru Angae Kidakkum”. This means that the body is made up of Panjabhootham (5 Universal parts). Inspite it is found in earth, it lives only by the thinking and experience on Paramathma (Sriman Narayanan) and this how our life lives and it should be only in such a way.
On hearing this, Madhukaviyaar was so happy that he had got a wounderful teacher (Aasaan) and raised his hands over his head and started to praise him in songs. At that time to open the eyes of Nammalwar, Emperumaan as “Sangu Chakradhari” along with Lakshmi samethar gave his dharshan. Along with Nammalwar, Madhurakaviyar got the dharshan of Emperumaan in Nindra Kola seva. Since, Madhurakaviyaar was able to get the seva of Emperumaan, he assumed Nammalvar as his emperumaan and started to worship him.
This is no selfishness with Sriman Narayanan, because of this only his bhakthas call him as “Emperumaan” thinking he is for them. Like the same way, since Nammalwar doesnt live for him and his thinking is always on Narayanan, Sadagopar was named as “Nammalwar”. Nam – means ours. Nammalwar sat beneath the Tamarid tree and did mangalasasanam for 35 divyadesam through his “Gnana Eye”. This Tamarid tree with some holes can be seen now, too. This tree is called as “Puliyalwar”.
Daily Thirumanjanam is done beneath the Tamarid tree. The utsava moorthy, Nammalwar is giving his seva in Golden sannadhi (small one) in Sobhana Mandapam. Before starting the Ramayana, Kambar wrote “Sadagopar Andadhthi” by keeping down his head towards Nammalwar. On the south mada veethi (street) Thiruvenkada mudayan – Sri srinivasar sannadhi and west mada street, is Thiru Aranganathan Sannadhi and on north mada street, Ulagaccharyar, Azhagar, Vedantha desikar, Manavala Maamunigal, Andal sannadhis are found.
The one more speciality si Udayavar Ramanujar wears white colours dress rather than wearing saffron colour. (Rishis wears only saffron coloured dress). The Sadaari, which is kept on our head in all of the Vaishnava temples is said to be Thiruvadi (feet) of Emperumaan and it is the Nammalwars shape (or) dimension. He is explaining the world that he acts as the dust which is found below the feet of Emperumaan. Udaya Nangai, who gave birth to Nammalwar, it was Sri Emperumaan who gave the Gnana to him and because of this, he accepts both of them as his mother.
Because of this only, in all the Nava Thirupathis (total – 9), Sri Emperumaan is found along with two thaayars. (Nava Thirupathi is the sthalam is Nammlwar’s where did the Mangalasasanam) Travelling a distance of 1 mile away from this sthalam, we can find “Appan Sannadhi”, where we can find the sannadhi for Kaarimaran, father of Nammalwar.
திருத்தல வரலாறு:
இந்த ஆழ்வார் திருநகரி என்ற சபருளம மிகு ஊருக்கு தன்சபாருநல், ஆதிகெத்ரம், குருகாகெத்ரம், திருக்குருகூர் என பல்கவறு சபேர்கள் உள்ைன. குருகு என்றால் ெங்கு என்பது சபாருள். அவ்வாறு ஆற்றில் மிதந்து வந்த ெங்கு, இத்தல சபருமாளை வணங்கி கமாட்ெம் சபற்றதால் திருக்குருகூர் என்ற சபேர் வந்தது என்றும், சபரும் சவள்ைத்தால் உலககம அழிந்து, மீண்டும் உருவானகபாது முதலில் உண்டான இடம் என்பதால் ஆதிகெத்ரம் என்றும், நாம்மாழ்வார் ககாயில் சகாண்டு இருந்ததால் ஆழ்வார் திருநகரி என்றும் சபேர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒரு ெமேம் மகாவிஷ்ணுவின் அம்ெமாக விைங்கும் விோெ முனிவளர அவரது பிள்ளைோகிே சுகமுனிவர், இந்த குருகாகெத்ரத்தின் மகிளமயிளனக் கூறுமாறு ககட்டுக் சகாண்டார். அதற்கிளெந்து விோெ முனிவரும் திருமாலுக்கு மிகவும் பிரிேமான இந்த திருத்தலத்தின் மகிளமளே கூறத் சதாடங்கினார்.
குருகாகெத்திர மகிளம:
பரந்தாமனுக்கு பல அவதாரங்கள் எடுத்து தன் பக்தர்களிடம் திருவிளைோடல்கள் புரிவகத கவளல. அதுகபால் தன் பரம பக்தன் நான்முகனிடம் உயிர்களை பளடக்கும் பவித்ரமான பணியிளன பரந்தாமன் அளித்தாலும், பிரம்மனுக்கு அதளன செய்ே சிறிது ஐேம் ஏற்பட்ட காலத்தில் திருமாலின் உதவிளே நாடினான். அதன்படி விஷ்ணுபிராளன ெந்தித்து தனக்குள்ை அச்ெத்ளதப் கபாக்கிக் சகாண்ட பிறகு தன்பளடப்புத் சதாழிலில் அதிகாரம் செலுத்த விரும்பினான்.
அவ்வாறு திருமாளலச் ெந்திக்க எண்ணி ஓராயிரம் வருடங்கள் கடும் தவம் புரிந்தான். தனது கடும் தவத்தின் பலனாக நான்முகன் முன் விஷ்ணு கதான்றினார். பின்னர் பிரம்மாவின்கவண்டுககாளுக்கிணங்க அவனது பளடப்புத் சதாழிலுக்கு எல்லாக் காலத்திலும் உறுதுளணோக இருப்கபன் என வாக்களித்தார். அகதாடு உன் தவத்தின் வலிளமோல் உன் பளடப்புத் சதாழிலுக்கு உதவி புரியும் வண்ணம் நான் இப்கபாது அவதரித்ததால், அதுவும் தாமிரபரணி நதிக்களரயில் அளமந்துள்ை அைகிே இந்த ஸ்தலத்தில் முதன் முதலாக அவதரித்தத்தால், இந்த கெத்திரம் ஆதிகெத்திரம் என்ற சபேருடன் விைங்கும் என்றும் என் நாமம் ஆதிநாதன் எனவும் விைங்கட்டும் என சபருமாள் கூறி அருளினார்.
கமலும் நான்முகன் நாராேணனிடம், எனக்கு குருவாக இருந்து உபகதசித்ததனால் இச்கெத்திரம் குருகாகெத்திரம் என விைங்க கவண்டும் என ககட்க அப்படிகே ஆகட்டும் என்றார் திருமால். அதன்பின் பிரம்மாவிடம் விஷ்ணு, நீ ஆதிகெத்திரம் சென்று ஆதிநாதளன வழிபட நீ நிளனக்கும் காரிேங்கள் ளககூடும் எனவும், ோரும் காணாத எனது திருகமனிளே உனக்குக் காட்டிேது மட்டுமல்லாமல், எல்கலாரும் பார்க்கும் வண்ணம் குருகாகெத்திரத்தில் அவதரிக்கப் கபாகிகறன் என்றும், கலியுகத்திகல ெடககாபர் என்னும் திருப்சபேருடன் கோகிோய் அவதரித்து வடசமாழி கவதங்களைத் தமிழில் சமாழிசபேர்த்து, அந்த கவதமளறகளைப் படிக்கும் மாந்தர் அளனவரும் முக்திேளடயும் வண்ணம் சித்தம் செய்ேப் கபாகிகறன் என்றும் கூறினார்.
ோளனயும் கவடனும் முக்தி அளடந்த வரலாறு:
முன்சனாரு காலத்தில் புனித ோத்திளர செல்ல எண்ணிே மகான்கள் பலரும் ஆதிகெத்திரம் வந்து அத்தல தீர்த்தங்களில் நீராடி நாராேணனின் சபருளமகளை கபசித் தீர்த்து, அன்ளறே கவளலகளை செய்து முடித்து சபாழுதும் விடிந்தது. இத்தலத்திற்கு வந்து தங்கள் சபாழுளதக் கழித்த முனிவர்களுக்கு அந்த சபாழுது மிக இனிளமோகக் கழிந்தது மனதிற்கு மகிழ்ச்சிளேத் தந்தது. அவ்வாறு மனம் மகிழ்ந்திருந்த கநரத்தில், அத்திருத்தலம் வந்த ஒரு ோளனக்கும் கவடனுக்கும் சபரும் ெண்ளட ஏற்பட்டு இருவரும் பலமாக ஒருவளர ஒருவர் தாக்கிக் சகாண்டு மாண்டனர். ஆனாலும் கூட கதவகலாகத்தில் இருந்து இந்த ோளனளேயும், கவடளனயும் கமகலாகம் அளைத்துச் செல்ல சுவர்க்கத்தில் இருந்து தூதுவர்கள் வந்திருந்தனர். அகத கநரத்தில் ோளனயும் கவடனும் ெண்ளடயிட்டு செய்த பாவத்தின் பலனாக இருவளரயும் நரகத்திற்கு அளைத்துச் செல்ல எமதூதர்களும் வந்திருந்தனர். எமதூதர்கைால் விஷ்ணுதூதர்களை எதிர்க்க வழியில்லாமல் தங்கைது கடளமளேச் செய்ோமல் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர். ஆறறிவு இருந்தும் பாவம் புரிந்த கவடனுக்கும், ஐந்தறிவு பளடத்த ோளனக்கும் இந்த கெத்திரத்தில் முக்தி கிளடத்த அரிே நிகழ்ளவக் கண்ட முனிவர்கள் ஆச்ெர்ேத்துடன் இந்நிகழ்ளவ வசிஷ்ட முனிவரிடம் கூறினர். அவரும் இத்தல சபருளமயிளன கமலும் கூறலானார்.
தாந்தன் முக்தி சபற்ற வரலாறு:
பல காலங்களுக்கு முன்பு மந்தன் என்ற அந்தண சிறுவன் கவதம் கற்க ஆளெப்பட்டு கவத பாட ொளலயில் கெர்ந்தான். ஆனால் அவன் ஆளெப்பட்ட விதத்தில் அவனால் கவதங்களை மனம் ஒன்றி படிக்க முடிேவில்ளல. இதனால் ககாபமுற்ற அவனது குரு, மந்தளன ெபித்து பாடொளலயில் இருந்து அனுப்பிவிட்டார். அதன்பிறகு அவன் திருக்ககாயில்களில் கவளல செய்து தன் காலத்ளதக் கழித்து பின் உயிரிைந்தான். அடுத்த பிறவியில் தாந்தன் என்ற சபேருடன் ஒழுக்க சீலனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அவளன ோரும் மதிக்காத சூழ்நிளலயில், அவளன அளனவரும் ஒதுக்கிே சூழ்நிளலயில், குருகூர் தலம் வந்து ஆதிநாதளன வழிபட்டு அங்கககே தனது வாழ்ளவ சதாடர்ந்தான். இந்நிளலயில் தாந்தளன ஒதுக்கிேவர்களுக்கு திடீசரன கண் பார்ளவ இல்லாமல் கபானது. அவர்கள் அளனவரும் திருமாளலச் ெரணளடந்தனர். நீங்கள் எல்கலாரும் தாந்தளன ஒதுக்கிே காரணத்தினால் தான் உங்களுக்கு கண் சதரிோமல் கபானது, நீங்கள் அளனவரும் தாந்தனிடம் மன்னிப்பு ககட்க உங்களுக்கு மீண்டும் கண் பார்ளவ கிளடக்கும் என திருமால் அெரீரிோய்க் கூறினார். அவ்வாகற நடந்தபின் திருமாலும் ஸ்ரீகதவி, பூமாகதவியுடன் ஒன்றாய் தாந்தனுக்குக் காட்சிசகாடுத்து தாந்தளன முக்தி அளடேச் செய்தார். அதன் காரணமாக இத்தலம் தாந்தகெத்திரம் எனவும் சபேர் சபற்றது.
ெங்கமுனிக்கு அருள் கிளடத்த வரலாறு:
பின்சனாரு ெமேம் தாந்தன் தங்கிே ஆலமரத்தின் கீழ் கவடன் ஒருவன் தங்கிே காரணத்தினாகலகே அவனது அடுத்த பிறவியில் ெங்கன் என்னும் முனிவராக பிறந்து இளறவனடி கெர கடும் தவம் புரிந்தான். அவ்வாறு தவம் புரியும் கவளையில், ெங்கு முனிவளர நாரத முனிவர் ெந்தித்து, ெங்கன் தவம் புரியும் காரணம் ககட்க, முக்தி அளடயும் சபாருட்கட தவமிருப்பதாக அவர் கூற, “நீ குருகூர் சென்று சபருமாளை கவண்ட முக்தி கிளடக்கும்” என நாரதர் கூறினார். அவ்வாகற ெங்கனும், ெங்காக மாறி குருகூர் சென்று திருமாளல வழிபட்டு முக்தி அளடந்தார். அந்த இடம் இன்றும் திருச்ெங்கணி துளற என அளைக்கப்படுகிறது.
பஞ்ெ கெத்திரமாக விைங்கும் குருகாகெத்திரம்:
ஆதி கெத்திரம்:
பூகலாகத்தில் உள்ை திருமால் ஆலேங்களில் மகாவிஷ்ணு முதன் முதலாக வாஸம் செய்த தலம் என்பதால் ஆதி கெத்திரம் எனவும், இத்த இளறவனுக்கு ஆதிநாதன் எனவும் சபேர் வந்தது.
வராக கெத்திரம்:
சபரும் சவள்ைத்தில் அழிே இருந்த பூமிளே, திருமால் வராக அவதாரம் எடுத்து காப்பாற்றிே ஸ்தலம் என்பதாலும், பூமாகதவிக்கு ஞான உபகதெம் செய்வித்த ஞானபிரான் குடிசகாண்ட ஸ்தலம் என்பதாலும், வராக கெத்திரம் என்ற சபேர் வந்தது. இந்த ஞானபிரான் ென்னதி திருக்ககாயிலின் உள்கை முதல் பிரகாரத்தில் அளமந்துள்ைது.
கெெ கெத்திரம்:
ஆதிகெேன் உறங்காப்புளிோக வாழும் ஸ்தலம் என்பதாலும், அதன் அருகிகலகே நம்மாழ்வார் பிறந்து வைர்ந்து குடிசகாண்ட திருத்தலம் என்பதாலும் கெெ கெத்திரம் என வைங்கப்படுகிறது.
தீர்த்த கெத்திரம்:
தாமிரபரணி ஆறும், அதில் உள்ை திருச்ெங்காணித் துளறயும் தீர்த்தங்கைாக விைங்குவதால் தீர்த்த கெத்திரம் என அளைக்கப்படுகிறது. தாந்த கெத்திரம்: தாந்தன் என்னும் மானிடளன திருமாலின் அருளினால் கதவர்களும் வணங்கும் வண்ணம் உேர்த்திே ஊர் என்பதால் தாந்த கெத்திரம் என சபேர் வந்தது.
நம்மாழ்வார் வரலாறு:
சபருமாள் முன்பு, “கலியுகத்திகல வடசமாழி கவதங்களை தமிழில் உருவாக்க ெடககாபன் என்ற சபேரில் அவதரிப்கபன்” என்று கூறிேதுகபால, பாண்டிேநாட்டில் தாமிரபரணி ஆற்றங்களரயில் அளமந்துள்ை அைகிே ஆழ்வார்திருநகரி என்ற ஊரில் காரிேர், உளடேநங்ளக தம்பதிகளுக்கு, அவர்களின் கவண்டுதலுக்கு இணங்க, மகனாக வந்து அவதரித்தார். அவ்வாறு பிறந்த குைந்ளத பாலுண்ணுதல், அழுதல் என எந்த இேற்ளகோன செேல்களையும் செய்ோமல் இருந்தது. வைக்கத்திற்கு மாறாக வைர்ந்த அக்குைந்ளதளே மாறன் என்றும் பாராங்குென் என்றும் சபேரிட்டு அளைத்து வந்தனர். தன் குைந்ளதயின் இந்த நிளல கண்டு கவளலயுற்ற சபற்கறார், குைந்ளதளே திருக்குருகூர் ககாயில் சகாண்டு வந்து, ஆதிகெேன் புளிே மரமாக உள்ை மரத்தில் சதாட்டில் கட்டிப் கபாட்டனர்.
இந்நிளலயில் ெடககாபன் பிறப்பதற்கு முன்பாக, திருக்ககாளூரில் பிறந்த மதுரகவி, திருமாளல வணங்கி வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அவரது வேலில் கமய்ந்த பசு மாட்டிளன மதுரகவி விரட்ட, அப்பசு ஓடிே கவகத்தில் கால் இடறி கீகை விழுந்து இறந்தது. தான் செய்த பாவத்திற்கு வருந்திே மதுரகவி, அப்பாவத்ளதப் கபாக்க எண்ணி புனித நீராடும் சபாருட்டு வடநாட்டுப் பக்கம் செல்லத் துவங்கினார். அவ்வாறு வடக்கில காசியில் தவம் இருந்த ஒரு இரவு கநரத்தில், வானத்தில் கபசராளிளேக் கண்டார். அந்த ஒளி செல்லும் பாளதயிகலகே பல நாட்கள் நடந்து வந்து சகாண்கட இருந்தார். அந்த ஒளிோனது திருக்குருகூர் வந்ததும் மளறந்து கபானது. கொதிோக வந்து தன்ளன ஆட்சகாண்டது திருக்குருகூர் புளிே மரத்து ஆழ்வார்தான் என்பளத மதுரகவி கண்டுசகாண்டார். அதன்படிகே ெடககாபளர அளடந்து தன்ளன சீடனாக ஏற்றுக்சகாள்ளும்படி கவண்டினார். அவ்வாகற அவளர சீடராக ஏற்றுக்சகாண்டு திவ்ேப்பிரபந்தத்ளத உபகதசித்தருளினார். கமலும் ரிக், ேெூர், அதர்வண கவதங்களின் ொரத்ளத முளறகே திருவிருத்தம், திருவாசிரிேம், சபரிேதிருவந்தாதி கபான்றவற்ளறயும் உபகதசித்தார். எனகவ ெடககாபராகிே நம்மாழ்வார் கவதம் தமிழ் செய்த மாறன் என்ற புகழுக்கு உரிேவரானார். அறிவாலும், ஞானத்தாலும், பக்திோலும் சிறந்து விைங்கிே ெடககாபளர அளனவரும் இவர் நம்மவர் என விரும்பி அளைக்க நம்மாழ்வார் என்ற சபேர் உருவானது. திருமால் இவருக்குத் தந்தருளிே மகிைமாளலளே அணிந்திருந்த காரணத்தால், வகுைாபரணர் என்ற சபேரும் உண்டானது.
ஆழ்வார்கள் அளனவருக்கும் குருகபால நம்மாழ்வார் விைங்கிே காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்கைாகக் சகாண்டிருந்தார். அந்த வளகயில் பூதத்தாழ்வாளர தளலோகவும், சபாய்ளகோழ்வார், கபோழ்வாளர கண்கைாகவும், சபரிோழ்வாளர முகமாகவும், திருமழிளெோழ்வாளர கழுத்தாகவும், குலகெகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவளரயும் ளககைாகவும், சதாண்டரடிப் சபாடி ஆழ்வாளரத் திரு மார்பாகவும், திருமங்ளகோழ்வாளர வயிறாகவும், மதுரகவி ஆழ்வாளர பாதமாகவும் சகாண்டு விைங்கினார். நம்மாழ்வார் 36 திவ்ே கதெங்களைப் பாடியுள்ைார்.
31 ஆண்டு காலம் இந்த புளிே மரத்தடியில் 36 சபருமாளைப் பற்றி பாடிேதால் இந்த மரத்திளனச் சுற்றி 36 திவ்ே கதெப் சபருமாளின் திருவுருவங்கள் சபாறிக்கப் பட்டுள்ைன. நம்மாழ்வார், தனது 35-வது வேதில் இளறவனடி கெர்ந்தார். அவரது பூத உடல் பள்ளிசகாண்டுள்ை இடத்தில் திருக்ககாயில் அளமத்து ளவகாசித் திருவிைாக் சகாண்டாடினார் மதுரகவி ஆழ்வார். வட சமாழியில் நான்கு கவதங்கள் உள்ைது கபால் தமிழில் நான்கு கவதங்களை உருவாக்கியுள்ைார் நம்மாழ்வார். இவர் இேற்றிே திருவாய்சமாழி, திராவிட கவதம் என அளைக்கப்படுகிறது.
நாதமுனிகளின் தமிழ்த் சதாண்டு:
மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்ேபிரபந்தப் பாடல்களும் எங்கு கபானசதன்று சதரிேவில்ளல. பிற்காலத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ை வீரநாராேணபுரம் என்று அளைக்கப்படும் காட்டுமன்னார்ககாயில் என்ற ஊரில் அவதரித்த நாதமுனிகள் என்ற ளவணவ ஆச்ொரிோரின் சபரும் முேற்சிோல் அளனத்து நாலாயிர திவ்விேபிரபந்த பாடல்களும் கிளடக்கப் சபற்றன. அவரது சீரிே சதாண்டினால் நாசடங்கும் நாலாயிர திவ்விேப் பிரபந்தப் பாடல்கள் பரவின. நாதமுனிகளின் தமிழ் சதாண்டு கபாற்றுதற்குரிேது.
திருப்புளிே மர வரலாறு:
ஸ்ரீராமர் தனது அவதாரப் பேளன உலகத்திற்கு வைங்கி மனநிளறவு சபற்று, ளவகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அகோத்தியில் ஸ்ரீராமளரக் காண எமதர்மராொ வந்திருந்தார். நாங்கள் இருவரும் உளரோடிக் சகாண்டிருக்கும் கபாது ோர் வந்தாலும் உள்கை விட கவண்டாம் என ராமர், இலக்குவனுக்கு ஆளணயிட்டார். அந்த ெமேத்தில், ககாபத்திற்குப் கபர் கபான துர்வாெ முனிவர் அங்கு வர, அவரது ககாபத்ளதப் பற்றி நன்கு அறிந்த இலக்குவன், ராமரது ஆளணளே மீறி முனிவளர உள்கை விட்டான். அப்கபாது ராமன் முனிவளர நல்ல விதமாக உபெரித்து கபசி வழிேனுப்பி ளவத்தாலும், தனது கபச்ளெ மீறிே இலக்குவன் மீது ககாபம் சகாண்டார். எமதர்மராெரும் சென்றபின், இலக்குவளனப் பார்த்து “நீ அளெோப் சபாருைாக ஆவாோக” என ொபமிட்டார்.
இதளனக் கண்டு அதிர்ச்சி அளடந்த இலக்குவன் தன் ெககாதரனிடம் மன்னிப்பு ககாரினார். மனமிரங்கிே ராமர், நான் அளித்த ொபம் நடந்கத தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா கதவிளே காட்டுக்கு அனுப்பிே காரணத்தால், உறங்காப் புளிோக, அளெோப் சபாருைாக மாறப் கபாகும் உன் அருகிகலகே ஐம்புலன்களையும் சவன்ற பிரம்மச்ொரிோக ெடககாபன் என்ற சபேருடன் அவதரிக்கப் கபாகிகறன் எனக் கூறினார். வானுலகத்திற்கு கற்பக விருட்ெம் கபால் பூகலாகத்திற்கு இந்த உறங்காப்புளி மரம் அளமந்துள்ைது. இதன் இளலகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலளகக் காக்கும். இந்த உறங்காப் புளிேமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாககவ காட்சி அளிக்கிறது. இந்தப் புளிே மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருகபாதும் பழுத்ததில்ளல. பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிளடக்கிறது. சுவாமி நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பளைளம உளடேது. ஆனால் இன்றும் செழுளமயுடன் உள்ைது என்பது ஆச்ெர்ேம் அளிக்கிறது. இந்த மரத்திளனச் சுற்றி 36 திருக்ககாயில்களின் சபருமாள் திருவுருவங்கள் சபாறிக்கப் பட்டுள்ைதால், இங்கு வந்து
வழிபட 36 திவ்விே கதெங்களுக்கு சென்று வந்த பலன் கிளடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த குருகூர் ஸ்தலம், கம்பர், ராமானுெர் வழிபட்ட சபரும் சிறப்பு சபற்ற ஸ்தலங்கைாகும். மணவாை மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.
திருக்ககாயில் அளமப்பு:
திருக்ககாயில் ஊரின் நடுநாேகமாக அளமந்துள்ைது. திருக்ககாயிலின் முன்புறம் பந்தல் மண்டபம் என அளைக்கப்படும் கல் மண்டபம் அளமந்துள்ைது. இந்த கல் மண்டபத்ளதத் தாண்டி, மாட வீதிளேத் தாண்டிச் சென்றால் ராெ ககாபுரம் வருகிறது. ககாயிலின் உள்கை பலிபீடமும், அதளன அடுத்து சகாடிமரமும் அளமந்துள்ைன. கருடர் ென்னதிளேத் தாண்டிச் சென்றால் ஆதிநாதனின் மூலவர் ென்னதி அளமந்துள்ைது. இத்திருக்ககாயிலில் கருடன் அளமப்பு ெற்று வித்திோெமாக உள்ைது. கருட பகவான் எல்லா ககாயில்களிலும் ளக கூப்பி வணங்கிே நிளலயில் அளமந்திருப்பார். இத்திருக்ககாயில் மட்டும் ளககளில் அபஹஸ்தமும், நாகரும், ெங்கு ெக்கரத்துடனும் காணப்படுகிறார்.
பின்னர் ஸ்ரீ ராமர் ென்னதி, கெளன முதலிோர் ென்னதி, சபான்னீந்த சபருமாள் ென்னதிளேயும் காணலாம். உட்பிரகாரத்தில் கவணுககாபாலன் ென்னதியும், ஞானபிரான் ென்னதியும், ஞானபிரான் கருடனும், ஆதிநாேகி ென்னதியும், பன்னிரு ஆழ்வார் அளறயும் அளமந்துள்ைன. இராப்பத்து மண்டபத்திளன அடுத்து உறங்காப்புளி என்றும் திருப்புளி என்றும் அளைக்கப்படும் இக்ககாயில் தலவிருட்ெம் அளமந்துள்ைது.
இதன் பின்புறம் பரமபத வாெல் அளமந்துள்ைது. ககாயிலின் உட்பிரகாரத்தில் ஸ்ரீ நம்மாழ்வாருக்குத் தனி ககாயில் உள்ைது. அதளன அடுத்து நாதமுனி ென்னதி, ோகொளல, பன்னிசரண்டு ஆழ்வார் ென்னதி, நரசிம்மர் ென்னதி,திருகவங்கடமுளடோன் ென்னதிகள் அளமந்துள்ைன. ஆதிநாதர் ென்னதியின் சவளிபிரகாரத்தில் கண்ணாடி மண்டபம், கம்பர் அளற அளமந்துள்ைன. ககாயில் மதிலுக்கு சவளிகே ஸ்ரீ பட்சிராெர் ென்னதியும், ஸ்ரீ கிருஷ்ணர் ென்னதியும், அனுமன் ென்னதியும் அளமந்துள்ைன.
சிற்பக்களல:
இத்திருக்ககாயில் சிற்பக்களலயிலும் சிறந்து விைங்குகிறது. இத்திருக்ககாயிலில் சிற்பக் களலக்கு மகுடம் ளவத்தாற்கபால் குைல் தூண்களும், கல் நாதஸ்வரமும், கல் படிமங்களும், இளெத் தூண்களும் உள்ைன. இங்குள்ை தூண்களில் இரண்டு துவாரங்கள் கபாடப்பட்டுள்ைன. இரு பக்கமும் இருவர் நின்று சகாண்டு மாறி மாறி ஊதினால் ெங்கின் ஒலியும், எக்காை ஒலியும் ஏற்படுகிறது.
இத்திருக்ககாயிலில் கல்லால் ஆன நாதஸ்வரம் ஒன்று உள்ைது. நாதஸ்வரத்தின் அடிபாகத்தில் பித்தளைப்பூண் கபாடப்பட்டுள்ைது. இந்த இளெக்கருவி சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னதாக கிருஷ்ணப்ப நாேக்கர் காலத்தில் ககாயிலுக்குக் சகாடுக்கப் பட்டதாகத் சதரிகிறது. இத்திருக்ககாயில் சிற்பம், இளெ, கட்டிடக்களலயில் மட்டுமல்ல ஓவிேத்திலும் சிறந்து விைங்குகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் தனிக் ககாயிளலச் சுற்றி உள்ை பிரகாரச் சுவர்களில் 108 திவ்ேகதெப் சபருமாள்களின் உருவங்கள் ஓவிேங்கைாய்த் தீட்டப் பட்டுள்ைன. பல் கவறு வரலாற்றுக் களதகளும் ஓவிேங்கைாய்த் வளரேப்பட்டுள்ைன.
சகாண்டாடப்படும் உற்ெவங்கள்:
ஆனி மாதம் வெந்த உற்ெவம், ஆடி மாதம் திரு ஆடிஸ்வாதி, ஆவணி மாதம் திருப்பவுத்திர உற்ெவமும், உறிேடி உற்ெவமும், புரட்டாசி மாதம் நவராத்திரி உற்ெவம், ஐப்பசி மாதத்தில் ஊஞ்ெல் உற்ெவமும், கார்த்திளக மாதத்தில் திருக்கார்த்திளக தீபத் திருவிைாவும், சபருமாள், ஆழ்வார், ஸ்ரீ ளவகுண்டம் செல்லுதல் திருவிைாவும், சித்திளரத் திருவிைாவும், சித்திராப் சபௌர்ணமி திருவிைாவும், ளவகாசிப் சபருவிைாவும், கருட கெளவயும், மாசி உற்ெவமும், பங்குனி உற்ெவமும், ளவகுண்ட ஏகாதசி விைாவும் என வருடம் முழுவதும் திருவிைாக்கள் சகாண்டாடப் படுகின்றன.
